ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி!!

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

அங்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் எவ்வாறு உள்ளது என்பதை கண்டறிந்தார்.

இன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், அணி நிர்வாகிகள் திரளாக அஞ்சலி செலுத்த வந்திருந்ததால் ஜெயலலிதா நினைவிடத்தில் கூட்டம் அலைமோதியது.