1.2 பில்லியன் ரூபா செலவில் யாழில் கலாசார மண்டபம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் சுமார் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ். நகரில் கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் திகதி இலங்கை – இந்திய அரசாங்கத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கலாசாரம் மண்டபம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கட்டட நிர்மாண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.