அதிகரிக்கப்பட்ட வரிகள் விரைவில் நீக்கம்!

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள வரியினை கூடிய விரைவில் நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தினால் அரசாங்க சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்திற்கமைய நட்டமடையும் நிலைமையில் உள்ள அரசாங்கத்தின் நிறுவனங்களை, தனியார் நிறுவனங்களுடன் இணைத்து செயற்படுத்துவதற்கான முறை ஒன்று மாத்திரமே மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதாரணமாக ஸ்ரீலங்கா டெலிகொம் போன்ற நிறுவனங்கள் நட்டமடையும் நிலைமையை தடுத்து மிகவும் வெற்றிகரமாக நடத்தி செல்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போதைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குள் 5000 ரூபாய் தாள்கள் கைமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியில் இருந்த 1300 கோடி பணம் சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கூறப்படும் சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.