தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி காலமானார். இவர் இறந்த துக்கம் தாங்காமல் திரைப்பிரபலங்கள் பலரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்த பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியது தொடர்பான ஆடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில், முதல்வர் ஜெயலலிதா இறப்பு செய்தி கேட்டவுடன் மிகவும் வருத்தமாக இருந்தது என்றும் என்ன பேசுவது என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர், அவரது இந்த இறப்பு அனைத்து குடும்பங்களுக்குமே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மனம் வருந்தி கூறியுள்ளார்.
இருப்பினும் ஜெயலலிதா தன்னுடைய தீவிர ரசிகர் என்று கேள்விப்பட்டேன், என்னை அவர் அதிகமாக ரசித்ததாகவும் தான் அறிந்தேன் என கூறியுள்ளார்.
துணிச்சல் மிக்க பெண், யாருக்கும் பயப்பட மாட்டார், மனதில் என்ன படுகிறதோ அதை அப்படியே சொல்லும் தன்மை உடையவர், அவர் தன்னை பொறுத்த வரையில் இறக்கவில்லை, என்று கூறிக்கொண்டிருக்கும் போதே கண்கலங்கியுள்ளார்.
அதிமுகாவை காப்பாற்ற வேண்டும் என்று பாடுபட்டவர், அவர் பெயரைச் சொல்லித்தான் நிறையபேர் ஏதேதோ செய்ததாகவும், அவரை பார்க்க பலமுறை முயற்சி செய்தும் தன்னை பார்க்க யாரும் உள்ளே விடவில்லை என உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.
இதனால் தனக்கு மிகவும் அசிங்கமாக இருந்தது. ஆனால் அவரால் தான் தன்னுடைய தொழில் முடங்கியது, படவாய்ப்புகள் குறைந்தது என கூறினார்கள்.
அதை நான் சத்தியமாக நம்பவில்லை, அவர் இயற்கையானவர், மனரீதியாக தன்னை அவர் ரசித்ததாக கேள்வி பட்டேன்.
அவர் இறந்தது தான் மிகுந்த ஏமாற்றம், அவரை சுற்றியுள்ளவர்கள் தான் தன்னை நடிக்கவிடவில்லை, அவரை பார்க்க விடவில்லை என்று கேள்விப்பட்டேன்.
ஆனால் அதைத் தான் நம்பவில்லை என்றும் அது தனக்கு தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
ஆனால் அவர் மிகவும் நல்லவர், சிறந்த நகைச்சுவை குணம் கொண்டவர், அவருடைய பெயரைக் கூறி யார் யாரோ எதேதோ செய்து விட்டார்கள், முடியவில்லை, என கணகலங்கி பேசி முடித்துள்ளார்.