பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் வரும் 26-ந்தேதி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்குகிறது.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் இந்த டெஸ்ட் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படும். பாக்சிங் டே டெஸ்டில் விளையாட ஆஸ்திரேலிய வீரர்கள் யாராக இருந்தாலும் விரும்புவார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஷேன் மார்ஷ் இடம்பிடித்திருந்தார்.
பாகிஸ்தான் தொடருக்கு முன் தென்ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடியது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது அவரது கைவிரலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது பாகிஸ்தான் தொடரில் அவருக்குப் பதிலாக நிக் மேடின்சன் விளையாடி வருகிறார். ஷேன் மார்ஷின் காயம் இன்னும் குணம் அடையவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவர் பாக்சிங் டே டெஸ்ட் வாய்ப்பை இழக்கிறார்.