மீண்டும் பிறந்துவிட்டார் ஜெயலலிதா!

தேனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார்- காயத்ரி அவர்களின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டியுள்ளார் அவரது தோழி சசிகலா.

ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக சசிகலாவை பொதுச் செயலாளராக்க தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மக்களை சந்திக்கும் சசிகலா ஆறுதல் கூறுகிறார், விஜபிக்களையும் சந்திக்கிறார், அதுவும் ஜெயலலிதா அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டே.

இந்நிலையில் ஜெயலலிதா போன்றே குழந்தைகளுக்கு பெயர் சூட்டுகிறார் சசிகலா, தேனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செந்தில்குமார்- காயத்ரி அவர்களின் பெண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டியுள்ளாராம்.