வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் தென்பகுதியில் பிரபல துறைமுக நகரமான ஏடென் என்ற நகரம் ஒன்றுள்ளது, இந்நகரில் வடகிழக்கில் உள்ள கோர் மக்ஸார் மாவட்ட ராணுவ தலைமையகத்தில் இன்று சம்பளம் வாங்குவதற்காக பல வீரர்கள் ஒன்று கூடியிருந்தனர்.
அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி அங்கு வந்த அடையாளம் தெரியாத தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய அதிரடி தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உள்பட பலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.