யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து பொலிஸார் மற்றும் இளைஞர்களுக்கு இடையில் இன்று மாலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலையில் மோட்டார் சைக்களில் சென்ற இரு இளைஞர்களை போக்குவரத்து பொலிஸார் மறித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை கேட்டபோது, அந்த இளைஞர்களிடம் அது இருக்கவில்லை.
எனினும் வீட்டில் உள்ள ஆவணத்தை எடுத்து வருவதாக கூறி, இளைஞர்களில் ஒருவர் பொலிஸாருடன் காத்திருக்க மற்றவர் ஆவணத்தை எடுக்கச் சென்றுள்ளார்.
ஆனால் ஆவணங்களை எடுக்க சென்ற இளைஞர் மேலும் பலரை பொல்லு, கம்புகளுடன் கூட்டி வந்து பொலிஸாரை மிரட்டியதுடன், மோட்டார் சைக்கிளையும் விடுவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை விடுவித்த பொலிஸ் அதிகாரி, சில மணிநேரங்களில் கலகதடுப்பு பொலிஸார் சகிதம் குறித்த இளைஞர்களின் வீட்டு சென்றுள்ளார்.
குறித்த இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.