கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஜப்பானில் உள்ள யோகோஹாமாவில் நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட்- ஜப்பானின் கஷிமா அன்ட்லெர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்சிமா முதல் கோலை பதிவு செய்தார். அதற்கு பதிலடியாக கஷிமா அன்ட்லெர்ஸ் அணியின் ககு ஷபாசகி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்து ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சி அளித்தார்.
ஆனால், ரியல் மாட்ரிட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 4-2 என வெற்றி பெற்றது.
பெனால்டி வாய்ப்பு மூலம் முதல் கோலை அடித்த ரொனால்டோ, அதன்பின் கூடுதல் நேரத்தில் மேலும் இரண்டு கோல்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் கடந்த மூன்று வருடத்தில் இரண்டு முறை இந்த உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.