வடக்கில் இருந்து இந்தியா வரை பயணிகள் கப்பல் ஒன்று செல்வதற்கு 32 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 2ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ள வடக்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், கப்பல் ஊடாக பயணத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்முறை திருவிழாவில் 2000 பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதற்கு கப்பல் ஒன்றில் பயணிப்பதற்கு வடமாகாண ஆளுநரிடம் தான் அனுமதி கோரியததாக சிவசேனை இந்து சம்மேளத்தின் பிரதானி சச்சித்தானந்தன் தெரிவித்துள்ளார்.
தற்போது வரையில் இந்த கோரிக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சிடமும், இலங்கை கடற்படையிடமும் முன்வைத்து அவசியமான அனுமதியை பெற்றுக் கொடுத்ததாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
பயணத்திற்கு அவசியமான கடவுச்சீட்டு, விசா மற்றும் கப்பல் கட்டணங்கள் பக்தர்களினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவை ஒன்று எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.