சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
புலனாய்வுப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தற்போது பிரேஸிலின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றி வரும் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி இன்று காலை 9.00 மணிக்கு ஜகத் ஜயசூரிய புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக உள்ளார்.
லசந்த கொலை தொடர்பில் இதற்கு முன்னதாகவும் இராணுவ அதிகாரதிகள் உத்தியோகத்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் அதி உயர் இராணுவ அதிகாரி ஜகத் ஜயசூரிய என சுட்டிக்காட்டப்படுகின்றது.