சீன அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஹம்பாந்தோட்டை கைத்தொழிற்பேட்டைக்கான காணிகள் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டதுடன் மக்கள் போராட்டங்களும் நடத்தப்பட்டிருந்தன.
இந்த விடயம் குறித்த மூன்று சீன நிறுவனங்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து சீன அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் குறித்த சீன நிறுவனங்கள் தயாரித்து சீன அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்த அறிக்கைகளின் பிரதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.