திருப்பதி செல்லும் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22ஆம் நாள், திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாளை மறு தினம் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் ரேனிகுண்டா விமான நிலையம் செல்வார்.

அங்கிருந்து தரைவழியாக அவர் திருப்பதிக்குச் செல்லவுள்ளார்.

திருப்பதியில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, எதிர்வரும் 22ஆம் திகதி , நாடு திரும்பவுள்ளார்.