தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சசிகலா இப்படியா கட்டளை போட்டார்? தீபாவின் பேட்டி ஒளிபரப்பு!

பிரபல தமிழ் செய்தி ஊடகம் ஒன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை பதிவு செய்திருந்தது. குறித்த நிகழ்ச்சியானது கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒளிபரப்பப்படும் என்று அந்த செய்தி ஊடகம் விளம்பரப்படுத்தியது.

ஆனால் திட்டமிட்ட திகதியில் அவரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவில்லை. சமகால அரசியல் நகர்வுகள் குறித்து பேசியிருந்த தீபாவின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை இருட்டடிப்பு செய்ததன் காரணம் குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமின்றி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மீது தங்களுடைய அதிருப்திகளை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் குறித்த செய்தி ஊடகத்தின் தலைமை ஆசிரியர் தீபாவுடன் நடத்திய கலந்துரையாடலை ஒளிபரப்பாவிட்டால், தான் வேலையை விட்டு நின்றுவிடுவதாக கூறி மிரட்டியதாகவும், அதுமட்டுமின்றி இது ஒளிபரப்பப்படவில்லை என்றால் மக்கள் தங்கள் மீது கொண்ட நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என கூறியதாக தகவல்கள் வெளியாகியது.

இதனால் நிர்வாகம் சசிகலாவிடம் சென்று தீபாவின் பேட்டியை ஒளிபரப்புவதற்கு அனுமதி வாங்கியதாவும், அதை சசிகலாவுக்கு ஒளிபரப்பு செய்து காட்டியதாகவும் கூறப்படுகிறது. அதைக் கண்ட சசிகலா சில விடயங்களை தவிர்க்க உத்திரவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னரே அவரின் பிரத்யேக பேட்டி ஒளிபரப்பப்படும் என்று தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.