4 நாள் பயணமாக கிர்கிஸ்தான் ஜனாதிபதி இந்தியா வந்தார்!

இந்தியாவுக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடி சென்றார். இதைத்தொடர்ந்து அந்த நாட்டின் ஜனாதிபதி அல்மாஸ்பெக் சார்செனோவிச் ஆட்டம்பாயெவ் நேற்று டெல்லி வந்தார்.

4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆட்டம்பாயெவ்வை, பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றார். இதையடுத்து அவர்  (செவ்வாய்க்கிழமை) உயர்மட்டக்குழுவினருடன் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசுகிறார்.