நெஞ்சம் மறப்பதில்லை படத்தை முடித்த கையேடு இயக்குனர் செல்வராகவன் இயக்கவிருப்பது சந்தானத்தின் படம் தான். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் சந்தானத்துக்கு ஜோடியாக இப்படத்தில் முதலில் பேசப்பட்டவர் ரெஜினா. ஆனால் தற்போது கிடைத்த தகவல்படி ரெஜினாக்கு பதில் நடிகை டாப்ஸீவை தேர்வு செய்துள்ளதாக தகவல் கசிகிறது. மேலும் இது 60 சதவீதம் உறுதியாகியுள்ளன, இன்னும் ஒப்பந்தம் போடுவது தான் பாக்கி என்கிறது நெருங்கிய வட்டாராம்.
நடிகை டாப்ஸீ தமிழ் சினிமாவில் கடைசியாக காஞ்சனா படத்தில் கலக்கியிருந்தாலும் அவருக்கு சொல்லும் படி வாய்ப்பு அமையவில்லை. செல்வா படம் எப்போதுமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும் என்பதால் இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைய வாய்ப்பு உள்ளது.