பிரபல தயாரிப்பாளரான டி.சிவா அண்மையில் தான் வெங்கட் பிரபு இயக்கப்போகும் புதுப்படத்தை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வந்தது.
இந்த நிலையில் அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். வேந்தர் மூவீஸ் மதன் பணமோசடி வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்துள்ளது. இந்த சோதனை அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் நடந்ததாக கூறப்படுகிறது.
சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சொல்லப்படுகிறது. அம்மா கிரியேஷனுக்கும், வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கும் இருந்த வியாபார தொடர்புகள் பண பரிவர்த்தனைகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.