விஷ்ணு விஷால் ஜோடியாகும் ஹன்சிகா?

விஷ்ணு விஷால் தற்போது ‘கதாநாயகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முருகானந்தம் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்து வருகிறார். ‘கதாநாயகன்’ படத்தை தொடர்ந்து முருகானந்தம் இயக்கும் மற்றொரு படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘கதாநாயகன்’ படப்பிடிப்பு முடிந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் நிலையில், தற்போது இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கதையை கேட்ட ஹன்சிகா, பிடித்துப்போய் இதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும், ஹன்சிகா நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ‘இஷான் புரொடக்ஷனஸ்’ நிறுவனம் சார்பில் துஷ்யந்த் ராம்குமார் தயாரிக்கிறார்.