ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் பகல்-இரவாக பிரிஸ்பேனில் நடந்தது. ஆஸ்திரேலியா 429 ரன் குவித்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 142 ரன்னில் சுருண்டது.
ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 490 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 382 ரன் எடுத்து இருந்தது. ஆசாத் சபீக் 100 ரன்னிலும், யாசர்ஷா 4 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசிநாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 108 ரன் தேவை. கைவசம் 2 விக்கெட் என்ற நிலையில் பாகிஸ்தான் ஆடியது. 2 விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தொடர்ந்தது.
ஆசாத் சபீக் 137 ரன் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தார். கடைசி விக்கெட்டாக யாசர்ஷா 33 ரன்னில் ரன் அவுட் ஆனார். பாகிஸ்தான் 450 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் அந்த அணி 39 ரன்னில் தோற்றது. ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஜேக்சன் பேர்டு 3 விக்கெட்டும் எடுத்தனர்.
பரபரப்பான தொடரில் பெற்ற இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 3 போட்டிக் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 2-வது டெஸ்ட் வருகிற 26-ந் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.