ஸ்மார்ட்போன் பயன்பாடு இண்டர்நெட் இல்லாமல் முழுமை அடையாது என்பதே உண்மை. பார்க்க கவர்ச்சிகரமாக இருக்கும் இன்றைய ஸ்மார்ட்போன்களின் அத்தியாவசிய ஸ்மார்ட் அம்சங்களை பயன்படுத்த கட்டாயம் தேவைப்படுவது இண்டர்நெட் தான்.
அந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த இண்டர்நெட் பயன்பாடு இன்னமும் நம்மவர்களுக்கு பெரிய தலைவலியாகவே இருந்து வருகின்றது. இன்று மொபைல் போன்களில் டேட்டா பயன்பாடு அதிகமாக இழுக்கப் படுவது என்பது பெரும்பாலானோரும் சந்திக்கும் பிரச்சனைதான்.
உங்கள் மொபைல் பயன்பாடுகளின் போது அதிக அளவில் டேட்டாவினை சேமிப்பதற்கான சில வழிகளை உங்களுக்கு கூறுகின்றோம். நீங்கள் நினைப்பதை விட இது சுலபம்தான். இந்த வழிகளை பயன்படுத்தி டேட்டாவினை சேமித்து கொள்ளுங்கள்.
க்ரோம் பக்கங்களை சுருக்கவும்
உங்கள் ப்ரவுஸரில் வெப் பக்கங்கள் லோடாவதற்கு முன்னால் அவற்றை டேட்டா சேவர் ஆப்ஷன் ( Data saver option ) சுருங்க வைத்து விடும்.இதனால் ப்ரவுஸிங் கொஞ்சம் தாமதமாக நடைபெற்றாலும் உங்களுக்கு இது பழகி விடும்.
ஓபேராவின் வீடியோ கன்சம்ப்ஷன்
ஆண்ட்ராய்ட் ப்ரவுசருக்கு என்று உள்ள ஓப்ரா தற்பொழுது பயனுள்ள வீடியோ கன்சம்ப்ஷன் அடங்கியதாக உள்ளது. இதனால் டேட்டாவினை அதிகளவில் சேமிக்க முடியும். இதை பயன்படுத்த ஓபேரா ப்ரவுஸரை டவுன்லோட் செய்து செட்டிங்ஸ் > டேட்டா சேவிங்ஸ் என்பதை க்ளிக் செய்து வீடியோ கம்ப்ரஷன் என்று இருக்கும் பாக்ஸை டிக் செய்யவும். இதனால் அதிக அளவில் டேட்டாவினை சேமிப்பதுடன் வீடியோக்கள் விரைவாக லோட் ஆகவும் செய்ய முடியும்.
ஃபேஸ்புக் ஆப்
ஃபேஸ்புக் செயலிகளினால் டேட்டா மற்றும் பேட்டரி அதிக அளவில் உரிஞ்ச படுவது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். நிச்சயம் ஃபேஸ்புக் வேண்டும் என்பவர்கள் இந்த தளத்தினை டின்ஃபாயில் மூலம் பயன்படுத்தலாம், இதனால் அதிகளவு டேட்டா சேமிக்கப்படும்.
பின்புல டேட்டாக்களை குறைக்கவும்
பேக்கிரவுன்டு டேட்டா பயன்பாடுகளை குறைப்பதால் அதிக அளவு டேட்டா சேமிக்க முடியும். பேக்கிரவுன்டு டேட்டா பயன்பாட்டினை குறைக்கசெட்டிங்ஸ் > டேட்டா யூசேஜ் > ரெஸ்ட்ரிக்ட் பேக்கிரவுன்டு டேட்டா > ஆப்ஸ் என்பதை பயன்படுத்தலாம். Settings >Accounts > Google > select the account இதை செய்து பின்பு தானியங்கியாக sync ஆக வேண்டாம் என்ற சேவைகளை uncheck செய்வதால் உங்களால் sync setting மாற்ற முடியும்.
ஆட்டோ அப்டேட்
ஆட்டோ அப்டேட்
கூகுள் ப்ளே ஆட்டோ அப்டேட் உங்கள் டேட்டாக்களை உரிஞ்சக் கூடியது தான். உங்களது கருவியில் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆட்டோ அப்டேட் மோடில் இருந்தால் மாதம் மாதம் உங்களுக்கே தெரியாமல் உங்கள் டேட்டா தீர்ந்து போகும். இதை சரி செய்ய ப்ளே ஸ்டோர் சென்று இடது புற நேவிகேஷன் பட்டனினை ஸ்வைப் செய்து ஆட்டோ அப்டேட் ஆப்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்து ‘Do not auto-update apps’ or ‘Auto-update apps over Wi-Fi only’. என்பதை செட் செய்ய வேண்டும்.
மியூசிக்
யூட்யூப், ஸ்பாட்டிஃபை, வைன் போன்ற மியூசிக் தளங்கள் உங்கள் டேட்டாக்களை உரிஞ்சக் கூடியவை. முடிந்த வரை பாடல்களை மைக்ரோ எஸ்டி கார்டில் பதிவு செய்து அதில் இருந்து பாடல்களை கேட்ப்பது நல்லது. இதனால் அதிகப்படியான டேட்டா சேமிக்க முடியும்.
செயலி
செட்டிங்ஸ் > டேட்டா யூசேஜ் ஆப்ஷனில் அதிகப்படியான டேட்டா இழுக்கக் கூடிய செயலிகளை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இதனால் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாத செயலிகளை நீங்கள் நீக்க விடலாம்.
ஆஃப்லைன் செல்லவும்
பொதுவாக கூகுள் மேப்ஸ் செயலியும் உங்கள் மொபைல் டேட்டாக்களை அதிளவு இழுத்து கொள்ளும். இதனால் நீங்கள் கூகுள் மேப்ஸ் செயலியை ஆஃப்லைனில் பயன்படுத்தலாம்.