லசந்த – மஹிந்தவின் இரகசிய தொலைப்பேசி உரையாடல் அம்பலம்!

கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இடையில் இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடல் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு சிங்கள ஊடகமொன்று அந்த தொலைப்பேசி உரையாடல் ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளது.

அந்த ஒலிப்பதிவில் அவர்கள் இருவரும் நீண்டக்கால நண்பர்களை போன்று உரையாடுவதனை காண முடிந்துள்ளன.

கடந்த அரசாங்கத்தின் போது எதிர் தரப்பு பிரதானிகளின் தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டன.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட ஒலிப்பதிவாக இது காணப்படலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும், கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது மஹிந்தவே ஜனாதிபதியாக செயற்பட்டுள்ளார்.

இதேவேளை, லசந்த விக்ரமதுங்க கொலையாளியை இனங்காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளனர்.

பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரின் புகைப்படம் போன்ற மாதிரி ஓவியப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.