விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கியில் கேட்டதை சம்பந்தனுக்கு பேனையினால் சாதிக்க ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்தார்.
கோத்தபாய சகிதம் யப்பான் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள அவர் நேற்றைய தினம் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
பிரபாகரனுக்கு யுத்தத்தால் பெற்றுக் கொள்ள முடியாததை சம்பந்தனுக்கு கொடுக்க முடியாது. ஆயுதத்தால் தோல்வியடைந்த ஓர் வெற்றியை சம்பந்தன் தற்போது எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றார்.
அப்படி ஒரு விடயத்தினை சம்பந்தனுக்கு சாதித்து கொள்ள முடியாது, அதற்கு நாம் இடம் கொடுக்கவும் மாட்டோம் என்பதையும் உறுதியாக கூறிக்கொள்கின்றோம்.
பாராளுமன்றம் மீண்டும் ஆரம்பித்த உடனேயே இதற்கான ஆயத்தங்களை நாம் செய்வோம். உண்மையான இலங்கையர்களாக இருந்தால் நீங்களும் எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள நீங்கள் உதவி செய்யுங்கள்.
மேலும் நாம் போத்தபாய, மஹிந்த மற்றும் இராணுவத்தினரிடம் கேட்டது எமக்கு சுதந்திரத்தையும் வெற்றியையும் பெற்றுத் தாருங்கள் என்றே நாம் கேட்டதை அவர்கள் கொடுத்தார்கள்.
அதற்கும் மேலாக இராணுவ வீரர்கள் தமது உயிரைத் தியாகம் செய்து, தம்மை கொடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள் அவர்கள் அனைவரும் இப்போது தண்டிக்கப்படுகின்றார்கள்.
இதேவேளை நான் வளர்ந்து வரும் ஓர் அரசியல் வாதி எனக்கு பல அச்சுறுத்தல்கள் இருக்கின்றது. ஆனாலும் 1000 குண்டுகள் நுழைத்தாலும் எமது போராட்டத்தை கைவிட மாட்டோம் என்பதை உறுதிபட இங்கே கூறிக்கொள்கின்றோம்.
அது போல புதிய நாடு ஒன்றினை அமைப்போம் என்ற சபதத்தையும் இங்கே கூறிக்கொள்கின்றோம். எங்கள் பக்கம் இருந்து நீங்கள் அனைவரும் உதவி செய்ய வேண்டும் எனவும் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.