நாடளாவிய ரீதியாக உள்ள 3200 பாடசாலைகளில் மது ஒழிப்பு பிரிவுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுங்கின்றது.
போதைப்பொருள் பாவனை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியினால் இந்த செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக செயலணியின் பணிப்பாளர் சமந்த கித்தலவாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.