விசாரணையை மூடிமறைக்க முயற்சிக்கும் யாழ்.பல்கலை. நிர்வாகம்!

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாட்டால் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை வலுவிழந்து செல்லும் வகையில் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலை கல்லூரியின் விரிவுரையாளர் முறைகேடாக நடந்து கொண்டதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த விரிவுரையாளர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

அந்த விரிவுரையாளரின் நடவடிக்கை தொடா்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர்.

இதனை தொடா்ந்து யாழ் பல்கலைகழக நிர்வாகம் குறித்த விரிவுரையாளரை பணிநீக்கம் செய்திருந்தது.

எனினும், தற்போது பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த விவகாரம் தொடா்பான விசாரணையை வலுவிழக்கச் செய்யும் வகையில் பல்கலைகழக நிர்வாகம் நடந்துகொண்டிருப்பதாக தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு பல்கலைகழக நிர்வாகம் வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும், சிலவேளைகளில் குறித்த சம்பவத்தை மூடி மறைத்து விடக்கூடிய நிலைமை தோன்றக்கூடும் என பாதிக்கப்பட்ட பெண்கள் கவலை தெரிவித்துள்ளனர்.