ரசிகர்கள் முன்னிலையில் ‘பைரவா’ ஆடியோ வெளியிடப்படுமா?

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பைரவா’ படத்தின் ஆடியோ வருகிற டிசம்பர் 23-ந் தேதி வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பைரவா’ ஆடியோவை ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக வெளியிடுவார்களா? என்ற கேள்வி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’, ‘தெறி’ ஆகிய படங்களின் ஆடியோ வெளியீடு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. ஆனால், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் பணப்பிரச்சினை, ஜெயலலிதாவின் மரணம் என பல காரணங்களால் ‘பைரவா’ ஆடியோ வெளியீடு பிரம்மாண்டமாக வெளியாகாது என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

எனவே, ‘பைரவா’ பாடல்கள் திட்டமிட்டப்படி டிசம்பர் 23-ந் தேதி ஆன்லைனில் நேரடியாக வெளியிடுவார்கள் என்று தெரிகிறது. ‘பைரவா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மொத்தம் 4 பாடல்களும், 1 தீம் சாங்கும் உள்ளது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியுள்ளார். பொங்கல் தினத்தையொட்டி 2017, ஐனவரி 12-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.