இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கொச்சியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொல்கத்தா- கேரளா அணிகள் பலப்பரீட்சை செய்தன.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெனால்டி சூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. கடந்த மூன்று வருடங்களில் கொல்கத்தா அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து கோப்பை வென்ற கொல்கத்தா அணி வீரர்களுக்கு, முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “வாழ்த்துக்கள் அட்லெடி -டி- கொல்கத்தா. இரண்டாவது முறை வெற்றி பெற்றது நன்று. அணியில் பங்கு பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.