ஜிம்பாப்வே அதிபர் தேர்தலில் 92 வயது முகாபே மீண்டும் போட்டி!

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 92 வயதான ராபர்ட் முகாபே அதிபராக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2017) முடிவடைகிறது.

அதை தொடர்ந்து அதிபர் தேர்தல் வருகிற 2018-ம் ஆண்டு நடைபெறுகிறது. அதற்காக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மாஸ்விங்கோ நகரில் ஆளும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று நடந்தது.

அதல் அதிபர் ராபர்ட் முகாபே மீண்டும் போட்டியிட வேண்டும் என கட்சி தொண்டர்கள் வலியுறுத்தினர். அவருக்கு ஆதரவாக கோ‌ஷம் எழுப்பினர். அதை தொடர்ந்து ஆளும் கட்சி சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளராக முகாபே அறிவிக்கப்பட்டார். கடந்த 1980-ம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து ஜிம்பாப்வே சுதந்திரம் பெற்றது. அதையடுத்து கடந்த 36 ஆண்டுகளாக முகாபே ஜிம்பாப்வேயின் அதிபராக தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கள்ள ஓட்டுகள் மூலம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.