ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடக பிரச்சார நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடக பிரிவு மூன்றாக பிளவடைந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குழு, ஒஷ்தஹேரத்தின் குழு உள்ளிட்ட மூன்று குழுவில் செயற்படுகின்ற 121 பேர் இவ்வாறு பிரிந்துள்ளனர்.
அந்த நிலைமைக்கமைய ஜனாதிபதியின் நிகழ்வுகளை பதிவு செய்யும் போது அவரின் உரை உட்பட செய்திகள் உரிய நேரத்தில் ஊடக நிறுவனங்களுக்கு கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விசேடமாக வெளிநாட்டு விஜயங்களின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்க தலைவர்களுடன் மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பிலான செய்திகள் அதற்கு அடுத்த நாளே ஊடகங்களுக்கு கிடைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊடக பிரச்சார குழுவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி அதிருப்பதி அடைந்துள்ளதாக ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.