நாட்டில் ஏற்படக்கூடிய கடுமையான வரட்சியை எதிர்நோக்க விசேட திட்டமொன்று வகுக்கப்பட உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நாட்டில் கடுமையான வரட்சி நிலைமை ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டில் கடுமையான வரட்சி ஏற்பட்டால் அந்த நிலையை எதிர்நோக்க இப்போதே திட்டங்கள் வகுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதிருந்தே திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்த ஆவண செய்யுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணித்துள்ளார்.
சுமார் நாற்பது நாட்களுக்கு இந்த வரட்சி நிலைமை நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையை எதிர்நோக்க விசேட செயலணி ஒன்றையும் நிறுவ பிரதமர் தீர்மானித்துள்ளார்.
வரட்சியினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.