ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலிக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி ஹசன் அலி, நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.சல்மான் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.அந்த வெற்றிடத்திற்காகவே ஹசன் அலி நியமிக்கப்பட உள்ளார்.
எதிர்வரும் 7ம் திகதி கட்சியின் தேசிய பேராளார் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக ஹசன் அலி நியமிக்கப்படுவார் எனவும், நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படும் எனவும் கட்சியின் தலைரும் அமைச்சருமான ஹக்கீம் அண்மையில் கண்டியில் வைத்து தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கட்சிக்குள் நிலவி வந்த முரண்பாடுகள் நிலைமைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் யாப்பு மீளவும் திருத்தி அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.