கருணாவின் குண்டு துளைக்காத வாகனத்திற்கு என்ன நடந்தது?

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பயன்படுத்திய குண்டு துளைக்காத வாகனம் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ஒன்பது கோடி 80 இலட்சம் ரூபா பெருமதியான குண்டுதுளைக்காத வாகனம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

முறையற்ற விதத்தில் அரச வாகனத்தை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கருணா கைது செய்யப்பட்டு, கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது கருணாளை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். எனினும் பின்னைய நாட்களில் பிணையின் மூலம் கருணா விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கருணா பயன்படுத்திய குண்டு துளைக்காத வாகனத்தை, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், ஜனாதிபதி செயலகத்திடம் நேற்று வழங்கியுள்ளனர்.

குறித்த வாகனம் மட்டக்களப்பிலுள்ள கராஜ் ஒன்றில் இருந்து இரண்டு மாதங்களுக்கு, பொலிஸாரின் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.