அனுராதபுரத்தில் அரசிய வகை வௌவால் இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அநுராதபுரம், கல்கடவல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் தோட்டத்தில் வைத்து இந்த வௌவால் இனம் கண்டுபிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் நிறத்தில் உடலமைப்பை கொண்டுள்ள வௌவால் ஜோடி ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. டீம்.எம்.ஜனித் தாரக என்ற இளைஞரின் வீட்டு தோட்டத்திலேயே இந்த வௌவால் ஜோடி கிடைத்துள்ளது.
இந்த வௌவால்களின் உடல் முழுவதும் ஆரஞ்ச் நிறத்தில் காணப்படுவதோடு இறக்கைகள் மிகவும் அழகான வகையில் கறுப்பு மற்றும் ஆரஞ்ச் இணைந்த நிறத்தில் காணப்படுகின்றது.
இலங்கையில் இவ்வாறான வௌவால் இனம் மிகவும் அரிது என குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் வாழும் 10 ஆயிரம் வௌவால்களின் ஒன்று அல்லது இரண்டினையே இவ்வாறு காண முடியும் என மிருகங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.