இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை!

பொய் செய்திகளை வெளியிட்டு மற்றையவர்களை அவமதிக்கும் வகையிலும் மற்றும் மற்றையவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையிலும் செயற்படும் இணையத்தளங்கள் தொடர்பாக நடவடிக்கையெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.

வத்தளையில் உள்ள பெகாஸஸ் ரீப் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற நீதிபதிகளின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தளங்கள் மூலமாக அதிமாக அவமதிப்புக்கும் , அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நபர் நானே. அந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது.

நான் எனது மனைவிக்கும் மற்றும் பிளைகளுக்கு அவ்வாறான இணையத்தளங்களை பார்க்க வேண்டாமென கூறியுள்ளேன். எவ்வாறாயினும் அந்த இணையத்தளங்கள் தற்போதுள்ள சுதந்திரத்தை கடுமையான வகையில் தவாறாக பயன்படுத்துகின்றன.

நாங்கள் அரசியல்வாதிகள் என்ற ரீதியில் அவ்வாறான அவமதிப்புக்கும் மற்றும் அசௌகரியங்களுக்கு பழக்கப்பட்டவர்கள். ஆனால் நிதித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அவர்கள் வாழும் சூழல் மற்றும் சமூக பின்னணிகள் தொடர்பாக பார்க்கும் போது அவ்வாறான விடயங்கள் புதியதாகவும் மற்றும் சவால்களை கொண்டதாகவும் இருக்கும்.

இந்நிலையில் இவ்வாறான நிலைமைக்கு நாம் அரசாங்கம் கவலையை தெரிவித்துக்கொள்கிறது. நீதி அமைச்சரும் நாமும் அரசாங்கம் என்ற ரீதியில் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம்.

இதன்படி இது தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். சுதந்திரம் என்பது நல்ல மனிதர்களுக்கே வழங்கப்படுகின்றது. ஆனால் நல்ல மனித்தர்களுக்கிடையே இருக்கும் சிறியளவிலான கெட்டமனிதர்கள் செய்யும் முறையற்ற செயற்பாடுகளை நாம் எப்போதும் கண்டிக்கின்றோம். அவற்றை நிராகரிக்கின்றோம். அவற்றை தடுக்க நாம் நடவடிக்கையெடுப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்