முச்சக்கர வண்டி சாரதிகளின் கவனத்திற்கு!

முச்சக்கர வண்டிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் வயதெல்லையை 35 ஆக அதிகரிப்பதற்கும், முச்சக்கரவண்டி போக்குவரத்து தொடர்பில் பல்வேறு ஒழுங்கு முறைகளை அறிமுகம் செய்வதற்கும் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் தினங்களில் இந்த சட்ட திட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக் கொண்டதன் பின்னர் சட்ட வரைவு திணைக்களத்திற்கு சமர்பிப்பதாகவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் பயணிகளினதும் சாரதிகளினதும் பாதுகாப்பு கருதியே இந்த தேசிய கொள்கையை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டிகளின் சங்கங்களுடன் நேற்று கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.