மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
பல சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. அதில் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டனர்.
அதில் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே என்ற 19 வயது இளம்பெண் உலக அழகி பட்டம் வென்றார்.
இந்நிலையில், உலக அழகிப் போட்டியில் முதல் 20 இடங்களுக்குள் இந்திய பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார். மிஸ்வேர்ல்டு 2016 போட்டியில் இந்திய அழகி ப்ரியதர்ஷினி சாட்டர்ஜி 17வது இடத்தைப் பிடித்துள்ளார். டெல்லியில் வசித்து வரும் பிரியதர்ஷினி, சமூகவியல் படித்து வருகிறார்.
கடைசியா இந்தியாவின் சார்பில் பிரியங்கா சோப்ரா கடந்த 2000-ம் ஆண்டு மிஸ்வேர்ல்டு பட்டம் வென்றார். அதற்கு முன்பாக ரீட்டா பரியா(1966), ஐஸ்வர்யா ராய்(1994), டையானா ஹைடன்(1997) மற்றும் யுக்தா முக்கே பட்டங்களை வென்றுள்ளனர்.