விரைவில் குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலை!

அதிகரிக்கப்பபட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலாத்துறை, கிறிஸ்தவ அலுவல்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

வத்தளை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் நாம் அறியப்படுத்தியுள்ளோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்து நிலைமையை வழமைக்கு கொண்டுவர அவர்கள் நடடிக்கை எடுப்பார்கள் என அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.