மாகாண ஆளுநருடன் பேச அவைத்தலைவருக்கு உரிமையுள்ளது : சீ.வி

வடமாகாண சபையில் பேசப்படுகின்ற சிக்கலான விடயங்கள் குறித்து மாகாண ஆளுநருடன் பேச அவைத்தலைவருக்கு உரிமை உள்ளது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

வடமாகாணசபையின் 70ம் அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த அமர்வின் போது அவைத்தலைவர் சிவஞானம் பேசுகையில், சிக்கலுக்குரிய விடயங்கள் தொடர்பில் ஆளுநர் றெஜினோல்ட் குரேயுடன் பேசவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் இவ்வாறான அதிகாரம் அவை தலைவருக்கு உண்டா என்ற கேள்வியை எழுப்பினர்.

இதன்போது சபையில் பேசிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவைத்தலைவருக்கு சிக்கலான விடயங்கள் தொடர்பில் ஆளுநரிடம் பேசும் உரிமை உள்ளது என தெரிவித்தார்.

மேலும், அவைத்தலைவர் பேசும் விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் எமக்கு தெரியபடுத்துங்கள் என கூறினார்.

இதற்கு பதில் அளித்த அவைத்தலைவர் தற்போது இதற்காக திகதியே கேட்டுள்ளேன் என கூறியதுடன் பேச்சு நடந்தால் கூறுவேன் எனவும், ஆளுநருடன் பேசும் விடயங்களை சபைக்கு கூறுவேன் எனவும் தெரிவித்தார்.