மாத்தறை பொலிஸாரிடம் சிக்கிய அமெரிக்க கார்! நாடு கடத்த நடவடிக்கை!!

பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகன் செலுத்தி சென்ற வாகனம் ஒன்றை மாத்தறை பொலிஸார் மறிந்து விசாரணை செய்துள்ளனர்.

எனினும் குறித்த வாகனம் பதிவு எண் இல்லாமல் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹம்மர் வகை ஜீப் வண்டி ஒன்றே இவ்வாறு பதிவு எண் இன்றி செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தை பயன்படுத்துவதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடிதம் மற்றும் காப்பீடு சான்றிதழ்களை காண்பிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

மூன்று மாதங்களுக்குள் மீண்டும் குறித்த வாகனத்தை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பவுள்ளதாக குறித்த சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த வாகனம் இடது கை சாரதியால் மாத்திரமே செலுத்த முடியும். எனினும் அதற்கான எந்த அடையாளங்களும் வாகனத்தில் இருக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், குறித்த வாகனம் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.