மூன்று வேளை உணவு உண்ண முடியாத அவலத்தில் மக்கள் : மஹிந்த அணி குற்றச்சாட்டு

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலையில் மக்கள் இருப்பதாக மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

மூன்று வேளை உணவையும் சரியாக உண்ண முடியாத நிலையில் அவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதைவிடுத்து, கடந்த அரசாங்கத்தின் செயற்பாட்டால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறிக்கொண்டிருக்கின்றது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, அடுத்த இடம்பnறும் எந்தத் தேர்தலிலும் இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவரும் ஆண்டுகள் பெரும் சோதனை மிக்கதாகவே அமையும் என்று செஹான் சேனசிங்க எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.