5000 ரூபாய் தாள்களை நீதிக்கு புறம்பான வகையில் வெளியில் எடுத்துச் சென்றுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கருத்தை எழுத்து மூலம் நிரூபித்துக்காட்டுமாறு பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவால் கப்ரால் ஆகியோரின் கையொப்பத்துடன் தான் சென்றிருக்க வேண்டும்.
அப்படியாயின் அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும் எனவும் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பான பகிரங்க விவாதத்திற்கும் தான் தயாராக உள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நிதி அமைச்சரின் இவ்வாறான கருத்து ரூபாயின் பெறுமதியை குறைத்துள்ளதுடன் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்துவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
வானம், பூமி, கங்கை, கடல், சமுத்திரம் என அனைத்தையும் விற்றுத் தீர்க்கும் முடிவில் பிரதமர் ரணில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியே தொடருமாக இருந்தால் புத்தாண்டையும் சிறப்பாக கொண்டாட முடியாது எனவும் இதன்போது பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.