வளிமண்டலம் மாசடைவதால் இலங்கையில் வருடந்தோறும் 7800 மரணங்கள் சம்பவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 8 மில்லியன் மக்கள் மரணிக்கின்றனர்.
இதில் அரைவாசியான மரணங்கள் உள்ளக வளிமாசடைதலால் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக வளிமாசடைதல், வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைக்காரணமாக ஏற்படுகின்றன.
இதில் கொழும்பை காட்டிலும் கண்டியில் வளி மாசடைதல் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்துறை முன்னாள் பேராசிரியர் ஓ.ஏ.இலேபெரும இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை இந்திய ஆய்வு ஒன்றின்படி நுளம்பு சுருளில் இருந்து வரும் புகையானது, 100 சிகரட்டுக்களில் இருந்து புகைக்கு சமனாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோன்று ஊதுபத்தியின் மூலமும் பாரிய வளிமண்டல பாதிப்பு ஏற்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.