ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டங்களுக்கான, வன்னி மாவட்ட பணிப்பாளராக பிரபா நியமனம்!

ஜனாதிபதியின் விசேட வேலைத்திட்டங்களுக்கான, வன்னி மாவட்ட பணிப்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபயக்கோனிடம் இருந்து நியமனக்கடிதத்தை பிரபா கணேசன் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பிரதி அமைச்சராக இருந்தக்காலத்தில் தாம் கொழும்பு மாவட்டத்துக்கு செய்தசேவைகளை போன்று வன்னிமாவட்ட மக்களுக்கு சேவை செய்யவுள்ளதாக பிரபா கணேசன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.