இலங்கையை வசப்படுத்த திட்டம் தீர்க்கும் அமெரிக்கா!

திருகோணமலைத் துறைமுகத்தின் மீது அமெரிக்கா கண் வைத்திருப்பதாக முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாசக் கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை கூறினார். தொடர்ந்து,

திருகோணமலைத் துறைமுகத்தின் பிராந்தியத்தில் தனது போர்த் தளங்களை விரிவாக்குவதற்காக திருகோணமலைத் துறைமுகத்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 400 மில்லியன் டொலர் பெறுமதியான போர் விமானங்களை கொள்வனவு செய்யுமாறு அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா இலங்கையை வசப்படுத்தி வருவதாகவும் இந்த ஊடக சந்திப்பில் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.