யாழ் குடாவை நோக்கி வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் படையெடுத்து வருகின்றன.
குறிப்பாக யாழ்ப்பாண தீவகப் பகுதியை நோக்கி பெருமளவிலான வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் காணப்படும் நீர்நிலைகளில் பறவைகள் தஞ்சம் அடைந்துள்ளன.
காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இவ்வாறு வெளிநாட்டு பறவைகள் அதிகம் வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.