ஜெயலலிதா முகம் போன்று வடிவமைக்கப்பட்ட இட்லி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு கோயில் மற்றும் சிலை ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் இன்றுவரை சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா முகம் போன்று 68 கிலோ எடை கொண்ட இட்லி, அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டுள்ளது.