இது தீபா இல்ல.. ஜெயலலிதா: உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் தந்தி தொலைக்காட்சி பேட்டி அதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற அவரது தோழியான சசிகலா முயன்று வருகிறார்.

சசிகலாவின் இந்த முடிவு பல அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அதேசமயம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை தலைமை பொறுப்புக்கு ஏற்க வேண்டும் என்றும் அவருக்கு ஆதரவு குரலும் ஒலித்து வருகிறது.

இந்நிலையில் ஒளிபரப்பாமல் வைத்திருந்த தீபாவின் பேட்டியை தந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதில் தந்தி டிவியின் ஒருங்கிணைப்பாளர் பாண்டே மடக்கி மடக்கி கேட்ட கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்தார் தீபா.

தீபாவும் ஒரு பத்திரிகையாளர் என்பதால் பாண்டேவுக்கு உடனுக்கு உடன் பதிலடி தந்தார். தீபாவின் இந்த பேட்டி அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அவரது பேச்சு மறைந்த அம்மா ஜெயலலிதாவை அப்படியே பிரதிபலிப்பதாக அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.