தன்னுடைய அப்பா இறந்ததற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் காரணம் என்று அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி காலமானார். அவர் இறந்ததில் இருந்து அவர் தொடர்பான பல்வேறு சாதனைகள் மற்றும் சோதனைகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அண்மையில் பிரபல தமிழ செய்தி ஊடகம் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருந்தார். ஆனால் அது ஒளிபரப்புவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதன் பின் நேற்று இரவு அது ஒளிபரப்பப்பட்டது.
அதில் தீபா மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொண்டார். அப்போது நான் 10 வருடங்களுக்கு முன்பு எனது அத்தை ஜெயலலிதாவை போயஸ் கார்டன் சென்று அடிக்கடி சந்தித்து பேசியிருக்கிறேன்.
என்னைத்தான் அவர் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என என் தந்தை விரும்பினார். ஆனால் எனது அத்தையோ சுதாகரனை தத்தெடுத்ததாக செய்திகள் வெளியானது. மேலும், சுதாகரனின் திருமணத்தை அவர் நடத்தப்போவதாகவும் தெரிய வந்தது.
இது எனது தந்தையின் மனதை மிகவும் பாதித்தது. இதனால் அவர் பெரிய மன உளைச்சலுக்கு ஆளானார். இதைப் பற்றியே அனுதினமும் சிந்தனையில் இருந்தார். அதுவே அவரின் மரணத்திற்கும் முக்கிய காரணமாக அமைந்தது என கூறியுள்ளார்.