இலங்கையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலின் பாதுகாப்பு துணை முகாமையாளருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்துள்ள தொழிற்சங்கம் ஒன்று அந்த ஹோட்டலின் பொது முகாமையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த ஹோட்டலின் துணை முகாமையாளரினால் டிசம்பர் 3ஆம் திகதி தனியார் பாதுகாப்பு பிரிவின் பெண் காவலாளர் ஒருவருக்கு பாலியல் ரீதியான அழுத்தம் பிரயோகித்ததாக ஹோட்டலின் தனியார் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹோட்டலின் பொது முகாமையாளருக்கும் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த முறைப்பாடு பாதுகாப்பு குறிப்பு புத்தகத்தில் பதிவு செய்து சம்பவத்தை உறுதி செய்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழியர் ஒருவருக்கு பாலியல் துன்புறுதத்தல் மேற்கொண்ட நபர் சேவையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் ஊழியர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்கள் அதிருப்தியடைந்துள்ளமையினால் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி மனித வள முகாமையாளர் சந்தித்த கிளை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரிகள் அவ்வாறு மேற்கொள்ள முடியும் என அங்கு அவர் தெரிவித்துள்ளார்.
பாரியளவு ஊழியர்கள் சேவை செய்யும் குறித்த ஹோட்டலின் மனித வள முகாமையாளர் அவ்வாறான கருத்து வெளியிடுவதற்கு பாரிய நிலைமை என நிறுவன ஊழியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அவரின் அந்த பதவியினால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் அதன் ஊடாக குறித்த ஹோட்டலின் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த கடிததத்தின் மூலம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.