வடக்கில் இடம்பெறும் அசம்பாவிதங்களுடன் முன்னாள் போராளிகளுக்கு தொடர்பா..?

வடக்கில் அண்மைக்காலங்களில் நடந்துவரும் பல்வேறு அசம்பாவிதங்களில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மீண்டும் ஒருமுறை யுத்தங்களில் ஈடுபடமாட்டார்கள் எனவும், அவர்கள் இரவில் விழுந்த குழிகளில் பகலில் விழமாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு வருடங்களில் இந்தப் புனர்வாழ்வுப் பணிகள் பூர்த்தியாகி விடும் எனவும், அதன்பின் இந்தப் போராளிகள் சமூக நீரோட்டத்தில் ஐக்கியமாகிவிடுவார்கள் எனத் தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.