கடுமையான வரட்சி ஏற்பட்டாலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மின்வலு எரிசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்…
தொடர்ச்சியாக தரமான மின்சாரம் மக்களுக்கு விநியோகம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.